இரு பக்கங்களும் அச்சடிக்கப்பட்ட ஏ4 அளவு காகிதங்களில் அளிக்கப்படும் மனுக்கள் மட்டுமே ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்ற பொதுச் செயலாளர் எஸ்.சஞ்சீவ் கல்கோங்கர் வெளியிட்ட அறிக்கையில், நிர்வாகத்தில் ஒரே அளவிலான காகிதத்தை பயன்படுத்துவது, காகிதங்களின் பயன்பாட்டை குறைப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தரமான ஏ4 அளவு காகிதங்களில் மட்டும் மனுக்கள் அளிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை அறிமுகப்படுத்த உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு பக்கமும் அச்சிடப்பட்ட ஏ4 அளவு காகிதங்களால் அளிக்கப்படும் மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.