இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 1900 விமானங்கள் வரை தேவைப்படும் என ஏர்பஸ் இந்தியா நிறுவன தெற்காசிய தலைவர் ஆனந்த் ஸ்டான்லி தெரிவித்துள்ளார்.
“விங்ஸ் இந்தியா- 2020” என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், அடுத்த 20 ஆண்டுகளில் இந்திய போக்குவரத்தானது, ஆண்டுக்கு 8.2 சதவிகிதம் அளவுக்கு அதிகரிக்கும் என தெரிவித்தார்.
அடுத்த 20 ஆண்டுகளில் பயணிகள் விமானம் மற்றும் சரக்கு விமானம் என, சுமார் 1900 விமானங்கள் வரை தேவைப்படும் எனவும், அவற்றில் 440 விமானங்கள் பழைய விமானங்களுக்கு மாற்றாக தேவைப்படுவதாக தெரிவித்தார். விமான போக்குவரத்து துறை, அடுத்த 20 ஆண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் எனவும் அவர் தெரிவித்தார்.