டெல்லி ஷாகீன்பாக் போராட்டத்தை தீவிரப்படுத்த நிதியுதவி செய்ததாகக் கூறிப் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது முதல் அதைக் கண்டித்து டெல்லி ஷாகீன்பாக்கில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்துக்கு நிதியுதவி செய்ததாகவும் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறிப் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் டெல்லி மாநில நிர்வாகிகளிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த அமைப்பின் தலைவர் பர்வேஸ் அகமது, செயலாளர் முகமது இலியாஸ் ஆகியோரை டெல்லிக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.