ஸ்பைஸ்ஜெட் விமானம், உள்நாட்டில் பயணம் செய்வதற்கான சிறப்பு விற்பனை விலையை குறைத்து அறிவித்துள்ளது.
இந்த புதிய விற்பனையில், 987 ரூபாயிலிருந்து விமான டிக்கெட்டுகளை ஸ்பைஸ்ஜெட் வழங்குவதாக அறிவித்துள்ளது. இன்று முதல் முன்பதிவு தொடங்கப்பட்டு, வரும் 15ம் தேதியுடன் நிறுத்தப்படும் எனவும் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சலுகையிலான டிக்கெட்டுகளை பயணிகள் முன்பதிவு செய்து அடுத்து ஆண்டு பிப்ரவரி 2021 வரை பயணத்திற்கு உபயோகித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு விமானிகளுக்கு 987 ரூபாயையும், வெளிநாட்டு விமானிகளுக்கு 3,699 ரூபாய்களுக்கு இந்த சிறப்பு விலை டிக்கெட்டுகளை வழங்குகிறது. முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கிடைக்கும் என அந்த நிறுவனம் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.