இந்தியாவில் விசா தடை செய்யப்பட்டுள்ளதன் காரணமாக,விமான நிறுவனங்கள் பங்குகள் இன்று காலை வர்த்தகத்தில் சரிந்தன.
கொரோனா வைரஸ் தாக்குதலால், இந்திய அரசு நேற்று வெளிநாடு பயணங்களுக்கான விசா சேவைகளை ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக, இண்டிகோ விமான சேவையின் பங்குகள் 10%, ஸ்பைஷ்ஜெட் விமான சேவை பங்குகள் 15% சரிந்துள்ளன. கடந்த சில வாரங்களாக, அரசு கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு செல்வதற்கும், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருவதற்கும் சில கட்டுப்பாடுகளை விதித்தது.
இதன் காரணமாக, பயணிகள் முன்பதிவு செய்த விமான டிக்கெட்டுகளை பெரும்பாலான விமான நிறுவனங்கள் ரத்து செய்து அதற்கான கட்டணங்களையும் திருப்பி செலுத்தியது. தற்போது, தினசரி முன்பதிவு செய்யப்படும் விமான டிக்கெட்டுகள் 15 முதல் 20% சரிந்துள்ளதாகவும், இதன் காரணமாக, காலாண்டு வருவாய் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.