SBI வங்கி தனது நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை (FD) மீண்டும் குறைத்துள்ளது.
வங்கி தனது வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களை 6% இல் இருந்து 5.9% ஆக குறைத்துள்ளது. திருத்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் அனைத்தும் புதிய வைப்பு தொகை, முதிர்ச்சியடைந்த வைப்புகள் புதுப்பித்தல் ஆகியவற்றிற்கு பொருந்தும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. மேலும், நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தில் அதன் குறைந்த செலவை 15 புள்ளிகள் வரை குறைத்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் எஸ்பிஐ 2வது முறையாக, வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. இந்த திருத்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி, 7 முதல் 45 நாட்களுக்கான, FD கள் 4.5 % இல் இருந்து 4% ஆகவும், ஒரு வருட FD கணக்குகளுக்கு 6% இல் இருந்து 5.9 % ஆகவும், அதேபோல் நிரந்தர வைப்பு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை உள்ள கணக்குகளுக்கு 6% இல் இருந்து 5.9% ஆக நடைமுறைப்படுத்தியுள்ளது. மூத்த குடிமக்களுக்கு சாதாரணமாக வழங்கப்படும் விகிதங்களிலிருந்து 50 அடிப்படை புள்ளிகள் பெறுவார்கள் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.