புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் பணிகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பான மேல்முறையீட்டு மனு மீது தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு தீர்ப்பளித்தது. அப்போது புதுச்சேரி அரசின் அன்றாட பணிகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்து உத்தரவிட்டது.
புதுச்சேரி அரசின் முடிவுகளில் துணைநிலை ஆளுநருக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், அதை குடியரசு தலைவருக்கு அனுப்பும்போது விரைந்து முடிவுகாண மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டுமெனவும், கூட்டாட்சி தத்துவத்தின்படி துணைநிலை ஆளுநரும், புதுச்சேரி அரசும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும் நீதிபதிகள் அறிவுத்தியுள்ளனர்.