இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 5 புள்ளி 3 விழுக்காடாக இருக்கும் என சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் மதிப்பிட்டுள்ளது.
முன்னதாக இந்த மதிப்பு 5 புள்ளி 4 ஆக இருக்கும் என்று மதிப்பிட்டிருந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளதாக மூடிஸ் தெரிவித்துள்ளது.
மேலும் உலக அளவில் கொரானாவின் தாக்கம் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள மூடிஸ், தன் காரணமாக, நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் உலளவிலான பொருளாதார நடவடிக்கைகள் மந்த நிலைக்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதனைக் கருத்தில் கொண்டே முந்தைய கணிப்பை விட தற்போது குறைத்து மதிப்பிட்டுள்ளது.