கடந்த 5 ஆண்டுகளில் உலகின் இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதியாளர் என்ற நிலையை இந்தியா தக்க வைத்துக் கொண்டுள்ளது.
ஸ்டாக்ஹோமில் உள்ள சர்வதேச அமைதி ஆய்வுக் கழகம் (Stockholm International Peace Research Institute) , சர்வதேச ஆயுத விற்பனை குறித்த தனது வருடாந்திர அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளது. அதே சமயம் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் ஆயுதங்களின் அளவு 72 ல் இருந்து 56 சதவிகிதமாக குறைந்துள்ளது.
அதற்குப் பதிலாக டென்மார்க், ஜெர்மனி, தென் கொரியா மற்றும் அமெரிக்காவிடம் இருந்து அதிக அளவில் ஆயுத கொள்முதல் நடந்துள்ளது. உலகின் முதல் 5 ஆயுத இறக்குமதி நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியா முதலிடத்திலும், எகிப்து மூன்றாம் இடத்திலும் உள்ளன. ஆயுத ஏற்றுமதியைப் பொறுத்தவரை இந்தியா 25 ஆவது இடத்தில் உள்ளது.