கொரானா அச்சுறுத்தலால் ஹோலிப்பண்டிகை கொண்டாட்டங்களுக்கு சில இடங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும், பல இடங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் வண்ணப்பொடிகளுக்குப்பதிலாக, வண்ணமலர்களை தூவி மக்கள் ஹோலிப்பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பாங்கே பிகாரி கோயிலில் திரண்ட ஏராளமானோர் வண்ணப்பொடிகளை தூவி ஹோலியை கொண்டாடினர்.
கொல்கத்தாவில் டால் உத்சவ் என்ற பெயரில் களைகட்டிய ஹோலிப்பண்டிகையில் சிறுவர்களும், பெரியவர்களும் பாரம்பரிய நடனமாடி அசத்தினர். இதனை கண்டுகளித்த திரளானோர் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை பூசியபடி, வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.