உத்தரகண்ட்டில் இந்தோ-திபெத்திய எல்லைப்பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் புகுந்து அட்டகாசம் செய்து வந்த குரங்குகளை, கரடி உடையணிந்த எல்லை காவல் படையினர் விரட்டியடித்தனர்.
மிர்தி மாவட்டத்தில் இந்தோ-திபெத்திய எல்லைப்படையினர் வசித்து வரும் காவலர் குடியிருப்பில் (ITBP Camp) குரங்குகள் கூட்டம் கூட்டமாக புகுந்து அட்டகாசம் செய்து வந்துள்ளன. இதனால், பெரிதும் பாதிப்படைந்த குடியிருப்பு வாசிகள், குரங்குகளை விரட்ட பலவாறு முயற்சித்துள்ளனர். அதன்ஒருபகுதியாக, கரடி உடையணிந்த இரண்டு காவலர்கள் குரங்குகளை விரட்ட முயன்றனர். அவர்களைப் பார்த்து பயந்த குரங்குக்கூட்டம், குடியிருப்புப் பகுதியை விட்டு வனப்பகுதிக்குள் சிதறி ஓடின.