ஜம்மு - காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் - பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கவாஜபோரா ரேபான் (Khawjapora Reban) எனும் இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அங்கு பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த, இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டுள்ளது.
இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.