கொரானா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான, மருத்துவ பரிசோதனை செய்வதற்கு, நாடு முழுவதும் அதி நவீன வசதியுடன் 52 ஆய்வகங்களை அமைத்து, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இங்கு, மருத்துவ பரிசோதனைக்கு தேவையான அனைத்து நவீன உபகரணங்களும் உள்ளதாக விளக்கம் அளித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், குறைந்த பட்சம் 25 ஆயிரம் பேருக்கு சோதனை செய்ய வசதி உள்ளதாகவும், ஆனால்,இதுவரை, 4 ஆயிரம் பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கொரானா வைரஸ் குறித்து, யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும், தேவையான அதி நவீன மருத்துவ பரிசோதனை வசதிகள் இந்தியாவில் உள்ளதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.