கொரானா தொற்றால் விமான சேவைகள் முடங்கி உள்ள நிலையில், ஈரான் ஹோட்டலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் 22 பேர் தங்களை மீட்குமாறு மத்திய அரசிடம் அபயக்குரல் எழுப்பி உள்ளனர்.
தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இவர்கள் ஈரானில் கப்பல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்றனர். இந்தியாவுக்கான விமான சேவைகள் துண்டிக்கப்பட்டதை அடுத்து, கொரானா பரவும் ஈரானில் இருந்து தப்ப முடியாமல், இவர்கள் ஈரானின் புஷார் மாகாண ஹோட்டல் ஒன்றில் அடைந்து கிடக்கின்றனர்.
பந்தர் அப்பாஸில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் அங்கிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ள இவர்கள் தங்களை எப்படியாவது ஈரானில் இருந்து மீட்குமாறு கண்ணீருடன் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக மீட்கப்படுவார்கள் என கடந்த 6 ஆம் தேதி சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் நாடாளுமன்றத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.