இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளை விமான நிலையத்திலேயே பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள சீனா, தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, ஈரான்,சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, ஹாங்காங், வியட்நாம், நேபாளம், இந்தோனேசியா ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு மற்ற விமானப் பயணிகளிடமிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். மற்ற விமான நிலையப் பயணிகளுடன் கலந்துரையாட அவர்களுக்கு அனுமதியில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
30 விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 52 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ரத்த மாதிரிகளைப்பெற்று இந்த மையங்கள் நோயை பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. கொரோனா பீதியால் அலுலக ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணிபுரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அனுமதித்துள்ளன.