யாகம், பசுவின் கோமியம் ஆகியவை கொரானா வைரசை அழிக்கும் திறன் கொண்டவை என்று உத்தரகண்டைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹரித்வார் மாவட்டத்துக்குட்பட்ட லக்சர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சஞ்சய் குப்தா. செய்தியாளர்களிடம் பேசிய இவர் கொரானா வைரசைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். அப்போது பாரம்பரிய வேதச் சடங்குகளுடன் மக்கள் யாகங்களை மேற்கொண்டால் அது கொரானா வைரசை காற்றிலேயே கொல்லும் என்று அவர் கூறினார். அதே போன்று கோமியத்தை குடித்தால் அது உடலுக்குள் சென்று கொரானா வைரசை அழிக்கும் என்ற அவர், வீடுகளை பசுஞ்சாணத்தைக் கொண்டு மெழுகினால் கொரானா வைரஸ் அண்டவே அண்டாது என்றும் தெரிவித்தார்.