கேரள மாநிலம் குருவாயூரில் யானைகளுக்கான, ஓட்டப் பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் குருவாயூர் கோவில் திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற யானைகளுக்கான ஒட்டப்பந்தய போட்டியில் 24 யானைகள் பங்கேற்றன. இதில் கோபி கண்ணன் எனும் யானை முதலிடம் பெற்று 8ஆவது முறையாக பரிசை தட்டி சென்றது. இந்த போட்டியை சாலையின் இருபுறமும் குவிந்திருந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.