பணியிடை நீக்கத்தில் இருப்பவர்கள் மற்றும் ஊழல் விசாரணைக்கு ஆளாகி இருக்கும் அரசு ஊழியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பாக மத்திய பணியாளர் துறை, மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மீது ஊழல் வழக்கு ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட வேண்டும். அதே போன்று குறிப்பிட்ட ஊழியர் மீது கிரிமினல் நடவடிக்கைகள் நிலுவையில் இருந்தாலோ, அவர் பணியிடை நீக்கத்தில் இருந்தாலோ, விஜிலன்ஸ் சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டு பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.