YES BANK தனியார் வங்கியின் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்ததையடுத்து, YES வங்கியுடன் கூட்டு வைத்திருந்த ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செயலியான போன்பே பாதிப்படைந்துள்ளது.
நிதி நெருக்கடி, மோசமான நிர்வாகம், வராக்கடன் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக கடந்த ஆண்டு முதல் 500 கோடி ரூபாயை இழந்து சிக்கலில் சிக்கியிருந்தது. இந்த நிலையில், வங்கியின் மூலதனத்தை பெருக்கவும், வாடிக்கையாளர்கள் நன்மதிப்பை மீட்டெடுப்பதற்கும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த நிலையில், யெஸ் வங்கி உடன் கூட்டு வைத்துள்ள போன்பே, பாரத்பே ஆகிய செயலிகளின் சேவைகளும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.