ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க இன்று முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
ஈரானில் தற்போது கொரோனா கிருமியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐக் கடந்துள்ளது. இந்நிலையில் அந்த நாட்டில் தமிழக, கேரள மீனவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பதாகவும், அவர்களை மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுதொடர்பாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஈரான் தூதரக அதிகாரி ஒருவர், ஈரான் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான சிறப்பு விமானங்கள் இன்று முதல் இயக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார். ஈரானில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட அந்த அதிகாரி, முறையான அனுமதி பெற்ற பிறகே அவர்கள் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்படுவார்கள்" என்றும் தெரிவித்தார்.