அவுரங்காபாத் விமான நிலையத்தின் பெயரை சத்ரபதி சாம்பாஜி மகாராஜ் விமானநிலையம் என மகாராஷ்டிரா அரசு பெயரை மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மராட்டியத்தை ஆண்ட மாவீர ர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் மகன் பெயர் தான் இந்த பெயராகும். மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான ஆட்சி இருந்த போது சிவசேனா அதன் கூட்டணி கட்சியாக இருந்து வந்த து. அப்போது முதல் இந்த விமனாநிலையத்திற்கு பெயரை மாற்ற வேண்டும் என சிவசேனா கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தது. தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு நடந்து வருவதை அடுத்து பெயர் மாற்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.