மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வரதன் கொரோனாவை எதிர்கொள்ள விமான நிலையங்கள் தயாராக இருக்கின்றனவா என்பதை நேரில் ஆய்வு செய்தார்.
டெல்லி சர்வேதேச விமான நிலையமான இந்திரா காந்தி விமான நிலையத்தில் முகக் கவசம் அணிந்தபடி வந்த ஹர்ஷ் வரதன், பயணிகளிடமும் அதிகாரிகளிடமும் உரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி 17 முதலே 7 விமான நிலையங்களில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அது இப்போது 21 விமானநிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார். ஓரிரு நாட்களில் சென்னை விமான நிலையத்தில் ஆய்வு செய்ய இருப்பதாகவும் ஹர்ஷ் வரதன் தெரிவித்தார்.