பெங்களூர் நகர வளர்ச்சித் திட்டங்களுக்காக கர்நாடக அரசு பட்ஜெட்டில் 8 ஆயிரத்து 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சட்டப்பேரவையில் நேற்று 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இதில் பெங்களூர் நகரின் குடிநீர், கழிவு நீர் அகற்றம், சாலைகள் சீரமைத்தல் போன்ற பணிகளுக்காக பட்ஜெட்டில் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெங்களூர் நகரின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்தப்படும் என்றும் தமது உரையில் எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரை தூய்மைப்படுத்தும் சுபரா பெங்களூரு திட்டத்திற்கு 999 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் எடியூரப்பா அறிவித்தார். கால்வாய் நீர் ஏரிகளில் கலப்பதைத் தடுக்கவும் ஏரிகளை சுத்தம் செய்து தூர் வாரவும் இந்த நிதி பயன்படும் என்று எடியூரப்பா தெரிவித்தார். மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்க வடிகால் பாதாள சாக்கடைகள் அமைக்கவும் மாநில அரசு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.