இந்தியாவில் வங்கி மோசடியில் ஈடுபட்டு இங்கிலாந்து சிறையில் உள்ள தொழிலதிபர் நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5 வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் நிரவ் மோடி, லண்டனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. லண்டனில் உள்ள வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிரவ் மோடி ஜாமீனில் விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நீரவ் மோடியின் மும்பையில் உள்ள வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் 51 கோடி ரூபாய் அளவிற்கு ஏலம் போனதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அவரின் ரோல்ஸ் ராய்ஸ் கார், பிரபல ஓவியர் எம் எஃப் உசேன் வரைந்த ஓவியங்கள் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்கள் ஏலம் விடப்பட்டதாகவும் அவற்றின் மூலம் 51 கோடியே 4 லட்சம் ரூபாய் பெறப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.