சுற்றுலாப் பயணிகள் பாரா மோட்டரிங் பலூன் மூலம் வானில் பறந்து சென்று புதுச்சேரியின் அழகை கண்டு ரசிக்கும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் அவர்களை கவரும் வகையில் புதுச்சேரி மெரினாவில் பாரா மோட்டரிங் பலூன் மூலம் பறந்து புதுச்சேரியின் ஒட்டுமொத்த அழகையும் ரசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இதற்கான சோதனை முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் முதல் இத்திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 மீட்டர் வரை, சுமார் 15 நிமிடங்கள் வானில் வட்டமிட்டபடி பறப்பதற்கு 3 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.