டெல்லியில் வன்முறையாளர்களை ஏவிவிட்டதாகவும், உளவுத்துறை அலுவலர் கொலைக்குக் காரணமானவர் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகீர் உசைனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லி சந்த் பாக்கில் ஆம் ஆத்மி மாமன்ற உறுப்பினரான தாகீர் உசைன் வீட்டின் மாடியில் நின்றுகொண்டு வன்முறையாளர்கள் கல்லெறிந்து, பெட்ரோல் குண்டுகளை வீசிய காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. இவர் வீட்டு மாடியில் இருந்து கற்குவியலையும், பெட்ரோல் குண்டுகளையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.
வன்முறையின்போது காணாமல்போன உளவுத்துறை அலுவலர் அங்கித் சர்மாவின் உடல் கழிவுநீர்க் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது.
தாகீர் உசைன் ஏவலின்பேரில் அவரது ஆட்கள் அங்கித் சர்மாவை இழுத்துச் சென்று கொன்று கழிவுநீர்க் கால்வாயில் வீசியதாக, அங்கித் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.
அவர் மீது காவல்துறையினர் 4 வழக்குகள் பதிவு செய்திருந்த நிலையில் டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சரணடைய வந்தபோது, அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.