ஜம்மு காஷ்மீர் சோபோர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் சிறப்புக் காவல்படை அதிகாரி வஜாஹத் அகமது மற்றும் பொதுமக்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும் சிலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுபான் என்பவர் அங்கு கடை வைத்திருந்தார். தாக்குதல் நடைபெற்ற போது அதில் அவர் சிக்கினார். இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளைத் தேடி ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
உயிரிழந்த காவல் அதிகாரியின் உடல் உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.