தலைமறைவாக உள்ள சாமியார் நித்தியானந்தாவிற்கு சொந்தமாக இந்தியாவில் உள்ள அனைத்து சொத்துக்களின் பட்டியலையும், 2 வாரங்களுக்குள் ஒப்படைக்குமாறு கர்நாடக மாநில சிஐடி போலீசாருக்கு ராம்நகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நித்யானந்தாவிற்கு எதிரான பாலியல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றம் உத்தரவிட்டும் பல வாரங்களாக நேரில் ஆஜராகாதா நித்யானந்தா மற்றும் அவர் தரப்பினருக்கு, இனியும் விலக்கு அளிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
தொடர்ந்து நித்யானந்தா மட்டுமின்றி, அவருக்கு ஜாமீன் மற்றும் அடைக்கலம் கொடுத்த அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும், சிஐடி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.