கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட ஏர் ஏசியா விமானம், பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டிமழையால் முகப்பு கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அந்த விமானம் கொல்கத்தாவிலிருந்து பக்டோக்ரா நோக்கி மாநில அமைச்சர் உட்பட 170 பயணிகளுடன் நேற்று மாலை 4.30 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் மீண்டும் கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையால், விமானத்தின் முன்புறமிருக்கும் விண்ட்ஷீல்டில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அங்கு நிலவி வரும் சீரற்ற வானிலையால் கொல்கத்தா வரும் மேலும் பல விமானங்களும் தாமதமாக தரையிறங்கி வருகின்றன.