கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக இந்திய கடற்படை மிலன் போர்ப் பயிற்சியை ஒத்தி வைத்துள்ளது.
வருகிற 18-ம்தேதி தொடங்கி 28-ம்தேதி வரையில் விசாகப்பட்டினத்தில் நடைபெறுவதாக இருந்த இந்த பயிற்சியில் 30க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பதாக இருந்தது.
இந்நிலையில், பங்கேற்கும் நாடுகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டும், கொரோனா வைரஸால் விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாகவும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.