உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் "லட்டு ஹோலி பண்டிகை" விமர்சையாக கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகை தொடங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே உத்திர பிரதேசத்திலுள்ள பல்வேறு ஊர்களில் ஹோலி பண்டிகையின் கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும்.
அந்த வகையில் ஹோலி பண்டிகை தொடங்க சில நாட்கள் உள்ள நிலையில், மதுராவில் நேற்று லட்டு ஹோலி பண்டிகை நடைபெற்றது.
நிகழ்வில் மக்கள் அனைவரும், தங்களது அருகாமையில் இருக்கும் அனைவரது மீதும் பலவண்ண பொடிகளை வீசி எறிந்தனர். மேலும் சிலர் சிறிய பிளாஸ்டிக் கவருக்குள் லட்டுகளை வைத்து அதனை திரளாக கூடியிருந்த பொதுமக்கள் மீது வீசினர்.