டெல்லியில் வன்முறை ஏற்படுத்தும் நோக்கில் ஐதராபாத் மாணவர்கள் மூலம் சமூக வலைத்தளத்தில் போலிச் செய்திகளைப் பரப்ப சதித்திட்டம் தீட்டியிருந்ததை உளவுத்துறை அம்பலப்படுத்தியுள்ளது.
ஷாகீன்பாக், டெல்லி போலீஸ் மர்டர்ஸ், ஜஸ்டிஸ் பார் பைசான், அமித் ஷா ரீசைன், கோ பேக் அமித் ஷா என்பன உள்ளிட்ட ஹேஸ்டேக்குகளில் இந்தப் போலிச் செய்திகளைப் பரப்பத் திட்டமிட்டிருந்துள்ளனர்.
தேசியக் கீதம் பாடக் கூறி 5 இளைஞர்களைக் காவல்துறையினர் அடித்துத் துன்புறுத்தியதாகவும், அவர்களில் பைசான் என்பவர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கூறப்படும் செய்தி டெல்லியில் வன்முறையைப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட போலிச் செய்தியாகும். இத்தகைய செய்திகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.