ஆந்திர மாநிலம் கடப்பா அருகே 400 ஆண்டுகள் பழமையான 8 பீரங்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கண்டிகோட்டா என்ற இடத்தில் மசூதியின் பின்புறம் உள்ள சுற்றுலா மையத்தில் வளர்ச்சி பணிகளின் ஒரு பகுதியாக கூலி தொழிலாளர்கள் முட்புதர்களை அகற்றியபோது நிலத்தடியில் 8 பீரங்கி குண்டுகள் சிக்கின.
அவை ஒவ்வொன்றும் 15 முதல் 18 கிலோ எடை கொண்டதாக இருந்தன. அவை 400 ஆண்டுகள் பழமையானவை என்றும், மன்னர் காலத்தில் இங்கு ஆயுத தொழிற்சாலை செயல்பட்டு எதிரிகளை தாக்க தயாரித்து மறைத்து வைத்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி தொல்லியல் துறையினர் விரிவான ஆய்வு நடத்த அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.