ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அஜ்மீர் தர்காவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வழங்கிய வெல்வெட் மலர்ப் போர்வை சமர்ப்பிக்கப்பட்டது.
காஜா மொய்னுதீன் சிஸ்தியின் 808ஆவது உருஸ் கொண்டாட்டம் அஜ்மீர் நகரில் நடைபெற்றது. இவ்விழாவின்போது அவரது நினைவிடத்தின்மீது மலர்ப்போர்வைகள், சால்வைகள் அணிவிக்கப்படும் மரபினை முஸ்லிம்களுடன், இதர மதத்தினரும் கடைபிடித்துவருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அண்மையில் வழங்கிய மலர்ப்போர்வை, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்டவர்களால் தர்கா நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.