நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 - வது கட்ட அமர்வு, திங்கட்கிழமை தொடங்குகிறது. நாட்டை உலுக்கிய டெல்லி கலவரத்திற்குப்பிறகு, நாடாளுமன்றம் கூடுவதால், இரு அவைகளிலும் இந்த பிரச்சினை, பெரும் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ள சூழலில் கூடும் இந்த கூட்டத்தொடரில், கடும் அமளியில் ஈடுபட, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
குறிப்பாக, அமித்ஷாவை மையப்படுத்தி, குரல் கொடுக்க காத்திருக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்தும் நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்ப, முடிவு செய்துள்ளனர்.
எனவே, இந்த அமர்வை பொறுத்தவரை, இரு அவைகளிலும் சூடான விவாதங்களும் அனல் பறக்கும் கருத்து மோதல்களும் இடம் பெறும் என அரசியல்வல்லுநர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.