பிரதமர் மோடி மாமனிதர் என்றும், அவர் மீது நாட்டு மக்கள் அனைவரும் அன்பு வைத்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தெற்குக் கரோலினா மாநிலத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், தாம் அண்மையில் மேற்கொண்ட இந்தியப் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும், தமது பேச்சைக் கேட்க மாபெரும் மக்கள் கூட்டம் திரண்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
இந்திய மக்கள் தமது தலைவர் மீது மிகுந்த அன்பு கொண்டிருப்பதாகவும், அதேபோல் அமெரிக்கா மீதும் அமெரிக்க மக்கள் மீதும் இந்தியர்கள் அன்பு கொண்டிருப்பதாகவும் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்கா 35 கோடி மக்கள் தொகையைக் கொண்டிருப்பதாகவும் அதேநேரத்தில் இந்தியா 130 கோடி மக்கள் தொகையைக் கொண்டிருப்பதாகவும் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.