உத்தரகாண்ட் மாநிலத்தில் தேவப்பிரயாகை நகரில் ஓடும் கங்கை ஆற்றில் புனித நீராட சென்ற உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நூலிழையில் உயிர்தப்பினார்.
சங்கம் என்னும் இடத்தில் தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன் புனித நீராட சென்றுள்ளார். அப்போது கால்தவறி சீறிப்பாயும் ஆற்றில் விழ முயன்ற போது அருகில் இருந்த பாதுகாவலர்கள் உடனடியாக அவரை தாங்கி பிடித்து காப்பாற்றினர்.
இதனால் அவர் நீரில் விழாமல் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த இடத்தில் அலக்நந்தா மற்றும் பாகீரதி என்ற 2 ஆறுகள் ஒன்றாக இணைந்து கங்கையாக உருவெடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.