இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட் ஜெனரலாக மாதுரி கனித்கர் என்ற பெண் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
இந்திய ராணுவத்தில் உள்ள உயர் பதவிகளில் ஒன்றாக கருதப்படும் இந்த லெப்டினென்ட் ஜெனரல் பதவிக்கு வரும் 3ஆவது பெண் இவராவார்.
ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் மாதுரி லெப்டினென்ட் ஜெனரலாக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு ராணுவ உயர் அதிகாரிகள் உள்பட பலர் வாழ்த்தும் மகிழ்ச்சியும் தெரிவித்தனர்.