ஆந்திர மாநிலம் கடப்பா அருகே பெற்ற இரு பெண் குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தலைமறைவானதாகக் கூறப்படும் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
சீனிவாசபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான பாலகொண்டய்யா என்ற அந்த நபரின் மனைவி 3 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தனது குழந்தைகளான 11 வயது பாவனா, 8 வயதான ஷோபனா ஆகியோரோடு வசித்து வந்த பாலகொண்டய்யா, வியாழக்கிழமை மாலை மகள்கள் இருவரையும் பைக்கில் வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
அதன் பிறகு அவர்கள் திரும்பாத நிலையில் வெள்ளிக்கிழமை பாவனா மற்றும் ஷோபனா உடல்கள் அங்குள்ள கிணறு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், உறவினர் ஒருவரை போனில் அழைத்த பாலகொண்டய்யா குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டேன் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.