நிர்பயா குற்றவாளி பவன் குப்தாவின் சீராய்வு மனு மீதான விசாரணை வரும் 6 ஆம் தேதி நடக்க உள்ளதால், ஏற்கனவே அறிவித்தபடி மார்ச் 3 ஆம் தேதி குற்றவாளிகளின் மரண தண்டனை நிறைவேற்றப்படாது என கூறப்படுகிறது.
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என கோரி பவன் குப்தா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளான்.
வரும் 6 ஆம் தேதி இது விசாரிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டாலும், அடுத்த கட்டமாக அவன் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளிப்பான் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதற்கு 14 நாட்கள் கழித்தே தண்டனையை நிறைவேற்ற முடியும். எனவே நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது மார்ச் 20 ஆம் தேதி வரை தள்ளிப் போகும் என கருதப்படுகிறது.