அகமதாபாத் விமான நிலையத்தில் பயணிகளுடன் புறப்படத் தயாரான கோ ஏர் நிறுவன விமானத்துக்குள் 2 புறாக்கள் பறந்து சென்றன.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து கோ ஏர் நிறுவன விமானம், மாலை 5 மணிக்கு புறப்பட தயாரானது. அப்போது விமானத்தினுள் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு 2 புறாக்கள் பறந்து சென்றன.
அதனை பார்த்து சில பயணிகள் அதிர்ச்சியடைந்தாலும், சிலர் சிரித்ததோடு, வீடியோவும் எடுத்தனர். ஒரு பயணியோ பறந்த புறாக்களை பிடிக்கவும் முயன்றார்.
இதையடுத்து புறாக்கள் வெளியேற்றப்பட்டு 30 நிமிடம் தாமதத்திற்கு பின்னர் விமானம் புறப்பட்டது. இதற்காக கோ-ஏர் நிறுவனம் பயணிகளிடம் வருத்தமும் தெரிவித்துள்ளது.