மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகியவை குறித்து இந்தியாவுக்கு யாரும் பாடம் கற்பிக்கத் தேவையில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சாவர்க்கர் பற்றிய நிகழ்ச்சியில் பேசிய அவர், மதச்சார்பின்மை, சமத்துவம், ஜனநாயகம் ஆகியவை இந்தியாவின் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்த கூறுகள் எனத் தெரிவித்தார். மதச்சார்பின்மை என்பது சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்துவது மட்டும் இல்லை என்றும், அனைத்து மதத்தினரிடையேயும் நல்லிணக்கத்தைப் பேணிக் காப்பதாகும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.
அடிப்படைவாதிகளும் தீவிரவாதிகளும் தங்கள் கடவுள்தான் சிறந்தவர் எனக் கூறுவார்கள் என்றும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் அனைத்து மதத்தினருடனும் நல்லிணக்கத்தைப் பேணுவார்கள் என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.