உத்தரப்பிரதேசத்தில் நாளை நடைபெறும் புந்தேல்கண்ட் விரைவுச்சாலை திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப் பிரதேச அரசால் கட்டப்படும் புந்தேல்கண்ட் விரைவுச்சாலை அந்த மாநிலத்தின் சித்திரகூடம், பாண்டா, ஹமீர்பூர், ஜலான் மாவட்டங்களின் வழியாகச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விரைவுச்சாலை, ஆக்ரா-லக்னௌ விரைவுச்சாலை மற்றும் யமுனை விரைவுச்சாலை ஆகியவற்றின் வழியாக புந்தேல்கண்ட் பகுதியை தலைநகர் டெல்லியுடன் இணைக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்காக சித்திரகூடம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்தபடியே நாடு முழுவதும் விவசாயிகளுக்கான 10ஆயிரம் உற்பத்தி அமைப்புகளையும் தொடக்கி வைக்கிறார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.