இந்தியா அமெரிக்கா இடையிலான உறவில் மிகச்சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
அதிபர் டோனால்ட் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்ததையடுத்து பாதுகாப்பு, வர்த்தகம், இந்தோ -பசிபிக் ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் அபாரமான வளர்ச்சி ஏற்படும் என்றும் அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இருநாட்டு மக்களிடையே உள்ள நட்புறவும் முன் எப்போதை விடவும் வலிமையாக இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள், மற்றும் எம்பிக்களும் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவுக்கு வர இருப்பதாகவும் டிரம்ப் அரசு அறிவித்துள்ளது.