பெங்களூரில் கடத்தல் ,மிரட்டல் ,கொலை போன்ற பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஸ்லம் பாரத் என்பவன் போலீசாருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
அவன் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வியாழன் அதிகாலை 2 மணிக்கு பாரத்தை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம் மீது அவனுடைய கூட்டாளிகள் தாக்குதல்தொடுத்தனர்.
இதனால் போலீசார் துப்பாக்கியால் சுட்டு ரவுடிகளை விரட்டியடித்தனர். அப்போது தனது கூட்டாளிகளுடன் பாரத் காரில் தப்பிச் செல்ல முயன்றான். ஆனால் அதிகாலை 5 மணிக்கு அவனை சிறப்புப் படையினர் ஹெசரகட்டா அருகே சுற்றி வளைத்தனர்.
அப்போது அவன் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் பதிலுக்கு காவல்துறையினர் சுட்டதில் பாரத் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.