கல்வி பயில்வதற்காக இங்கிலாந்து செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு 93 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
படிப்பதற்காக இங்கிலாந்துக்கு படையெடுக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2016ஆம் ஆண்டிலிருந்து மிக அதிகமாக உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இங்கிலாந்து அரசு, கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 37,500 இந்தியர்கள் கல்வி விசா பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
தங்களது நாடு சிறப்பான கல்வித்தரத்தை கொண்டுள்ளமையும், இந்திய மாணவர்களின் தனித்துவமான திறமையுமே இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கான காரணம் எனவும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.