இந்தியா-மியான்மர் இடையே பத்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
மியான்மர் நாட்டு அதிபர் யு வின் மைன்ட், தன் மனைவி டாவ் சோ சோவுடன் 4 நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் மியான்மர் அதிபரையும், அவருடைய மனைவியையும் வரவேற்றனர்.
பின்னர், டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, மியான்மர் அதிபர் யு வின் மைன்ட் இடையே பேச்சுவார்த்தை நடை பெற்றது.
இந்த பேச்சுவார்த்தையின்போது, இந்தியா-மியான்மர் இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றில் பெரும்பாலானவை மியான்மர் நாட்டில் இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்களாகும்.