மகாராஷ்டிரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை மராத்தி மொழி கட்டாயம் என்பதற்கான மசோதா மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மராத்தி மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில், வியாழக்கிழமை சட்டப்பேரவையில் பெரும்பான்மை ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதன்மூலம், வருகிற கல்வியாண்டில் இருந்து 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் மராத்தி கட்டாய பாடம் என்பதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் குறிப்பிட்ட ஒரு மாணவருக்கு அல்லது குறிப்பிட்ட ஒரு வகுப்பிற்கு இச்சட்டத்தின் சில விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனை கடைப்பிடிக்காத பள்ளிகளுக்கு தலா ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.