கலவரங்கள் வாழ்வின் ஒரு அங்கம் என ஹரியானா மாநில அமைச்சர் ரஞ்சித் சிங் சவுதாலா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் 34 பேர் பலியான நிலையில், பலகட்ட நடவடிக்கைகளுக்கு பின் அங்கு ஓரளவுக்கே நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.
இந்நிலையில் டெல்லி கலவரம் குறித்து கருத்து தெரிவித்த ஹரியானா மாநில மின் துறை அமைச்சர் ரஞ்சித் சிங் சவுதாலா, கலவரம் ஒன்றும் புதித்தல்ல என்றும், இதற்கு முன்பும் டெல்லியில் கலவரங்கள் நடந்துள்ளதாகவும் கூறினார்.
இந்திராகாந்தி கொல்லப்பட்ட போது டெல்லி பற்றி எரிந்ததாக கூறிய அவர், கலவரங்கள் வாழ்வின் ஒரு அங்கம் என்றும், அவை தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறினார். பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சுயேட்சை உறுப்பினரான அவரது கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.