விஷவாயு தடுப்பு முக கவசங்கள், அறுவை சிகிச்சை கத்திகள் உள்ளிட்ட மேலும் சில மருத்துவ உபகரணங்களின் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதை அடுத்து, இந்தியாவில் அனைத்துவிதமான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதிக்கு கடந்த மாதம் தடை விதிக்கப்பட்டது. உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதற்காக தடை விதிக்கப்பட்ட நிலையில், பின்னர் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் முக கவசங்கள், கையுறைகளின் ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டது.
இந்நிலையில், விஷவாயு தடுப்பு முக கவசங்கள், அறுவை சிகிச்சை கத்திகள், கண் சிகிச்சை உபகரணங்கள், சுவாசப் பிரச்னையால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு உபகரணங்கள் உள்பட மேலும் 8 விதமான மருத்துவ உபகரணங்களின் ஏற்றுமதிக்கான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.